Pages

Friday, November 4, 2016

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

தொலைத்து
விவரந்தெரியாத வயதில் தொடர்ச்சியாய் தேடி ..
வழி தெரியாது தவித்து
தெரிந்த வழியில் மோதி
பின்னர்
‘இனி வரும் ஜென்மத்தில் தான் ஒரு வேலை கிடைக்கும்’ என்ற  சமாதானத்துடன்
"தொலைஞ்சுதான் போச்சு" என்று சொல்லி
புதைந்துபோனதென் மனசு
…..
…………..
இடைப்பட்ட காலங்களில்...

ஏதேதோ திசைகள்
திக்கு தெரியாதும்
திக்கு தெரிந்தும்
எப்படி எப்படியோ பயணங்கள்
‘அழுகை’, ‘அவலம்’, ‘அவஸ்தை’
அப்பப்போஆனந்தம்’ என பல விதமாக கழிந்து போன காலங்கள்

10-ம் வகுப்பு கால
பணியும், பரிதவிப்பும்
பசுமையாய் நெஞ்சில் மலர்ந்த ஆரம்ப காலங்கள்

…வாழ்க்கையெனும் விசைத்தறியில் வலுவாய் இழுக்கப்பட்டு
மங்கிதான் போச்சு!

எத்தனையோ இரவுகள்
நெஞ்சில் சற்று சுகந்தம் பரப்ப
வலிய நினைவூட்டி - நினைவில் தொலைந்த இரவுகள்!
20 - கடந்த காலங்களிலும்
15-இல் பார்த்த தோற்றம் கொண்டே எப்போதேனும் மலரும் மர்ம கனவுகள் – -விட்டு செல்லும் விடியலில் - மீண்டும் பரிதவிப்பை

"என்னவோ?”
“எப்படியோ?”
எல்லாம் நலம் தானே?”
வேறேதாவது...?
என எப்படி, எப்படியோ

இன்று நிழற்பட தோற்றம் கண்டு…
25 வருட குழப்பம் தொலைக்கிறது மனசு
'வசந்தம்' கண்டு துளிர்க்கிறது
“நன்றி இறைவா! மிக்க நன்றி!!
“நல்லா வச்சுக்கோ!!”

“வேறென்ன சொல்ல?”